Home » BF – History in Tamil

BF – History in Tamil

எங்கள் வரலாற்றில் ஒரு வருங்கால அபிலாசைகளிலும் ஒரு பார்வை

இங்கே இரு வரலாறுகளை எடுத்துரைக்க வேண்டியுள்ளது. ஒன்று மட்டக்களப்பு பேகர்களின் வரலாறு அடுத்தது ‘பேகர் யூனியன் படிக்களோ’வின் 1927 ஆம் ஆண்டு முலம் வரலாறு.

அந்த நாட்களில் மட்டக்களப்பு பகுதிகளில் மூன்றாம் பாஷையாக க்கிரியோல் போர்த்துக்கேயம் காணப்பட்டது. இச் சமூகத்திற்க்காக பேகர் யூனியன் படிக்களோ எவ்.ஆர்.றாகல் போன்றவர்களினால் ஸ்தாபிக்கபட்டது. அக்காலங்களில் இவ் ஒன்றியத்திற்க்கு இடம் போன்று ஒன்றும் இருக்கவில்லை. மட்டக்களப்பு ‘லேடி மெனிங் டிரைவில்’இல் உள்ள பீட்டற் றாகல் போன்றவர்களின் பெரிய வீடுகளில் அங்கத்தவர்கள் சந்தித்து கொண்டார்கள்.

இலங்கையில் பேகர்கள் ஐரோப்பியரின் சந்ததியாவர். இச் சந்ததியினரின் ஆண்கள் அவர்கள் குடும்பப் பெயர்களின் முலம் அவர்களின் பேகர் பாரம்பரியத்தை கொண்டு செல்கின்றனர். மட்டக்களப்பில் கூடுதலாக போர்த்துகேய சந்ததியினர் ஐரோப்பிய மற்றும் ஆங்கிலேய பெயர்கள் கொண்டு இருக்கின்றனர், என்று பெரும்பாலும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. போத்துக்கீசர்கள் கப்பல்களைச் செலுத்தும் மாலுமிகளாக இருந்தமை மிகவும் வியக்க தக்கதாகும் அத்துடன் கப்பலில் இருந்த பணிக்குழுவினர்  பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்டனர்.

1505-1658 ஆண்டுகளில் போர்த்துக் கேயர் எமது தீவிற்க்கு வருகை தந்தனர் இவர்கள் அப்பிரதேசத்தில் உள்ளவர்களுடன் திருமணம் முடித்து கொண்டு பேகர் சமூகத்திற்க்கு வழிவகுத்தனர். இன்று பேகர் சமூகத்திற்க்குள்ளேயே திருமணத் தொடர்புகளை எற்ப்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். எங்களுடைய தனித்துவம் எங்கள் ஐரோப்பிய மூதாதயர் மற்றும் பாரம்பரியம் இலங்கையர் வாழ்க்கை நடைமுறையிடையே உள்ளதேயாகும்.

மட்டக்களப்பில் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியங்கள் பிறப்புகளின் போதும் (கிறிஸ்தவ மதத்தை கடைப்பிடித்தல்) திருமணங்களின் போது(உடைகள், உணவுகள், கவ்விறிஞ்ஞா நடனம் மற்றும் இசை) இறுதிச் சடங்குகளில் போதும் (இச்சடங்குகள் க்கறியோல் போர்த்துகேயத்தில் நடை முறைப்படுத்தபடுகின்றன) எங்கள் சமூகத்தில் வயது முதிர்ந்தோர் க்கியோல் போத்துக்கேயம் உபயோகிக்க தெரிந்துள்ளனா. இதனால் சில குடும்பங்களில் யுவதிகளுக்கு க்கிரியோல் போர்த்துக் கேயம் புகட்டப்படுகிறது.

எங்கள் தொழில் துறைகளை பார்ககும் போது எங்கள் சமூகத்தில் சிலர் ஆசிரியர்களாகவும், வங்கி உத்தியோகஸ்தினராகவும், நிர்வாகிகளாகவும், வர்த்தக நிறுவன நபர்களாகவும் காணப்படுகின்றனர், என்றாலும் எமது சமூகத்தில் பெரும்பாலானோர் பாரம்பரிய கலைதொழில்களான தச்சு வேலைகள, கொல்லன் வேலைகள், பொறிமுறையாளர் வேலைகள், மற்றும் தையல் வேலைகள் அகியயவற்றில் ஈடுபடுகின்றனர்.

மாதச் சம்பளங்களை பெறுபவர்களை விட நாட் கூலி பெறும் இவர்கள் 1957ல் வெள்ளம், 1978ல் புயல், 2004ல் ஆழிப்பேரலை, 2011ல் வெள்ளம் ஆகிய அனர்த்தங்களில் கூடுதலானோர் பாதிக்கப்படுகின்றனர். இன்று எமது சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில் பேகர்கள் அச்சு வேலைகளில்  பிரபலமாக காணப்பட்டனர். இன்று இவ் பேகர்களை காணமுடிவதில்லை சிலர் கத்தலிக் பிறஸ் இல்  வேலை செய்கின்றனர். க்கிரியோல் போத்துக்கேயப் பாவனை குறைந்து வந்து பாடசாலைகளில் உபயோகிக்கும் தமிழ் சிங்கள மொழிகள் அதிகமாக பாவனைக்குள்ளாகிறது. பாடசாலையில் கல்வி மொழிகளான தமிழ் மற்றும் சிங்களத்தினால் க்கிரியோல் போர்த்துக்கேயம் பாவனை குறைந்து வருகிறது. 2009-2010 இல் போதகர் டயஸ் அவர்களினதும் போர்த்துக்கேய உபகாரி அவர்களின் உதவிகளினால் போர்த்துக்கேய மொழி மட்டக்களப்பு திருகோணமலை பேகர் யுவதிகலிடையே மிட்க்கப்பட்டுள்ளது.

1962இல் ‘போகர்  யூனியன் படிகளோ’ மீழ் அமைக்கப்பட்டு, யாப்பு எழுதப்பட்டு தலைவரினதும், நிறைவேற்று அதிகார உறுப்பினர்களினதும் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதும் 1970ஆம் ஆண்டு நிலம் வாங்கபட்டு 1974ஆம் ஆண்டு றொனால் றொசையிரோ அவர்களின் தலைமைத்துவத்தின் கிழ் ‘பேகர் யூனியன் மண்டபம்’ கட்டப்பட்டது. ஆழிப்பேரலையின் பின் பல உபகாரிகளின் உதவிகளினால் குறிப்பாக றெவறன் பாதர் மிலர் எஸ்ஜே ஆகியோரால் கட்டிடத்தின் அடுத்த அடுக்கு கட்டப்பட்டுள்ளது.

படிக்களோ பேகர் யூனியனின் சார்பாக தலைவர்களாக பதவி வகித்த மோஸ்சஸ் பாத்லட், பீட்டர், சிசில் ஓக்கர்ஸ், ரொனால்ட் ரொசைரோ, க்லவர் ராகல், ரெஜிஸ் ராகல், சனி ஒக்கஸ் அத்துடன் தற்போதைய தலைவராக பொனி வின்சன்ட் பதவி வகிக்கிறார்.

கடந்த வருடங்களில் எம்.ஆர் மாசிலா அன்றாடோ போன்றவர்களின் பாரிய உதவிகளினால்  உதவி தேவைப்படுவோர்க்கு உதவி செய்யகுடியதாக இருந்தது. அத்துடன் வெள்ளத்தினாலும் ஆழிப் பேரலையினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி வழங்க முடியுமாக இருந்தது. துக்ககரமாக 2004 ஆழிப் பேரலையால் 99 பேகர்கள் மாண்டனர். அவர்களுக்கு ‘டச்பார்’ கரையோரத்தில் நினைவுச்சின்னத்தை நாம் கட்டினோம்.

அழிப் பேரலையில் தப்பித்து வீடுகளை இழந்த பேகர்களுக்கு இலங்கை அரசினதும் மற்றும்  ‘ஹெல்வடாஸ் ஸ்விஸ் அசோசியேஷன் சர்வதேச கூட்டுறவு மற்றும் பொதுநல நன்கொடைக்கான நிறுவனத்தின் திட்டமிடல் பிரச்சாரம் லெஸ்டர்  வெய்ன்மேன் மற்றும் ஸ்டீபன் லெப்ரோய்;’ என்ற நிறுவனத்தின்  உதவியுடன் பணிச்சயடி மற்றும் தன்னாமுனை இடங்களில் வீடுகள் கட்ட உதவப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் எஸ்.டி சனி ஒக்கஸ் தலைமையில் 150 குடும்பங்கள் பயனடைந்;தனர். அவுஸ்திரேலியாவின் ’80கழகத்தின்’ தொடர்ந்த பேகர் சிறுவர்ககளின் கல்விக்கான உதவிகளுக்காக நன்றி கூறுகின்றோம்;. எங்களுக்கு உதவின அனைவருக்கும் தொடர்ந்து  எங்களுக்கு உதவிகளை வழங்குகின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்னின்றோம்;.

   எங்களுடைய இலட்சியம்கள்

‘பேகர் யூனியன்  படிகளோவின் அங்கத்துவத்தை  அதிகரித்து  கிழக்கு கரையோரங்களில் வாழும் பேகர்களையும் வாழைச்சேனை முதல் அக்கரைப்பற்று வரை இடம்களில் வாழும் பேகர்களையும்  உள்ளடக்கி எங்களுடைய நோக்கம், எமது  ஒன்றியத்தின்  அங்கத்துவத்தை இலங்கையில் நகரம்களில் வெளியில் இருக்கும் பேகர்கள் அனைவருக்கும் பரப்புவதே ஆகும்.

யாழ்பாணம், மன்னார் திருகோணமலை, மாத்தறை, கண்டி ஆகிய இடம்களில் பேகர்களையும் வரவேற்க்க விரும்புகின்றோம். இன்று எமது பேகர் சமூகத்தை பேணிப்பாதுகாத்து மற்றவர்களுடன்  சேர்ந்து உதவி தேவையானோருக்கு உதவ விரும்புகின்றோம். (நேய்வாய்பட்டவர்களுக்கும், சிறுவர்ளுக்கு கல்வி மற்றும் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு)

‘பேகர் யூனியன் படிகளோ’ வின் குறிக்கோள் எமது சமூகத்தை கலாச்சாரத்தை பேணிப்பாதுகாப்பதும் எங்களது நல்லெண்ணத்தை பேகர் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் ஏனைய சமூகமங்களுங்கு பரப்புவதேயாகும்.

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: